அரசமரம் வழிபாடு - Bodhitree Worship
நமது பாரதத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் அரசன் மக்கள் துக்கத்திலிருந்து விடுபட்டு வாழ தன் அரச வாழ்க்கையை துறந்து, பல வருடம் காடு மலை என சுற்றி கடைசியாக பரந்து விரிந்த அரசமரத்தின் அடியில் அமர்ந்து கடுமையான, வலிமையான தியானத்தை தொடர்ந்து மேற்கொண்டு விசாகப்பௌர்ணமியன்று உயர்மெய்ஞானம் அடைந்தார் அவரே பகவான் புத்தர்.

பகவான் புத்தர், தொடர்ந்து இரவும் பகலும் தியானிப்பதற்காக அரசமரத்தை தேர்ந்தெடுத்ததன் காரணம், விஞ்ஞான ரீதியாக அரசமரம் இரு வேளையிலும் நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்ஸிஜனை வெளியிடுவதாலேயே.
பகவான் புத்தருக்கு போதிராஜா, போதிமாதவன், போதிசத்துவர் என பல பெயர்கள் நமது தமிழ் நூல்களில் அழைக்கப்படுகின்றன.

அரசன் அமர்ந்த மரம் அரசமரம் என்றும், தியானத்தில் அமர்ந்து ஞானம் பெற்றதால் போதிமரம் (சமஸ்கிருதத்தில் போதி என்றால் ஞானம்) என்றும், நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே அரசமரம் புனிதமாக வணங்கப்பட்டு வருகின்றன, மற்றும் விழாக்காலங்களில் நமது வீடுகளிலும், சுப காரியங்களிலும், பெண்கள் திருமணம் வேண்டியும், குழந்தை பேறு வேண்டி தொட்டில் கட்டியும், போதிராஜாவை வணங்குகின்றனர்.

வணங்கும் முறை:

 தினசரி வணங்குதல் நம் மனதிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது, மேலும் பௌர்ணமியன்று வழிபாடு செய்தல் மிகவும் சிறந்தது. அரசமரத்தை இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றி, இங்கு உள்ள ஸ்லோகத்தை மூன்று முறை கூறி, அமைதியோடு “போதிராஜா சரணம்” என்று வணங்கும்போது, பகவான் புத்தரின் தியான வலிமையாலும், ஞானத்தின் சக்தியாலும் பூரண ஆசிர்வாதம் கிடைப்பதாக நம்பப்படுகிறது