Meditation
தியானம் என்பது மனதை செம்மைபடுத்துவதற்கும், ஒரு முறையான செயற்பாட்டினுள் இயங்க வைப்பதற்கும் வழியாகும். பௌத்த தியானப் பயிற்சிகள் என்பது ஒருமுகப்படுத்துதல், தெளிவு, நேர்மறை உணர்வுகள் மற்றும் நிகழ்வுகளின் உண்மையான தன்மையை அமைதியாகப் பார்ப்பதை ஊக்குவிக்கும் மற்றும் வளர்க்கும் நுட்பங்கள் ஆகும். ஒரு குறிப்பிட்ட தியானப் பயிற்சியை பழகுவதன் மூலம், உங்கள் மனதின் வடிவங்கள், மற்றும் புதிய, மிகவும் நேர்மறையான வழிகளை வளர்ப்பதற்கான முறைகளை வழங்குகிறது. இத்தகைய அனுபவங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதலுக்கு வழிவகுக்கும்.
ஒழுங்கு முறையாக மனதினை செயற்படுத்துவதினால் அக வாழ்வு தூய்மை பெறும். அகம் தூய்மை பெறுவதினால் படிப்படியாக சுகமானதாக மாறும். இதனால் தைரியம், வீரியம் கொண்டு மகிழ்ச்சியாக வாழப் பழகிக்கொள்வீர்கள். மனதை மேன்மைபடுத்துவதால் இவை அனைத்தையும் உங்களால் பெற முடியும்
புத்தருடைய போதனை விசேஷமாக அவர் போதித்த தியானமுறை மனப்பிணிகளை முற்றாய் அகற்றி சித்தசமாதானமும் அமைதியும் உண்டாக்கக் கூடியது. தியானம் என்ற சொல் ஆதியில் பாவணை என வழங்கப்பட்டது என பாவனை என்றால் பயிற்சி வளர்த்தல் அபிவிருத்தி செய்தல் அதாவது மனத்தை பயிற்றுதல் அல்லது மனத்தை அபிவிருத்தி செய்தல். Mindfulness of Breathing and the Metta Bhāvanā meditations.
இதன் நோக்கம் மனதை கலங்கங்களில் இருந்து தூய்மைப்படுத்துதல், மனதை கலக்கும் தன்மைகளைப் போக்குதல். அதாவது காமம், பகைமை , சோம்பல், கவலைகள், சஞ்சலங்கள், சந்தேகங்கள் என்பவற்றால் உண்டாகக்கூடியவைகளை களைந்து மனதிலே மன ஒடுக்கம், விழிப்பு, விவேகம், உறுதி, ஊக்கம், விசாரணை நம்பிக்கை, ஆனந்தம், சாந்தி என்பவற்றை ஊன்றி யதாபூத ஞானத்தை அதாவது உள்ளதை உள்ளபடி அறியும் பக்குவத்தை தரும் உயர் ஞானத்தை அடைவதும், அதன் பயனாக பரமார்த்தமான நிர்வாணத்தை அடைவதும் ஆகும்
பௌத்த பாரம்பரியத்தில் பல்வேறு தியான நடைமுறைகள் அதாவது "மன-பயிற்சிகள்" போதிக்கப்பட்டு வந்தாலும் அவை அனைத்திற்கும் அடித்தளம் அமைதியான மற்றும் நேர்மறையான மனநிலையை வளர்ப்பதாகும். வரலாற்றில் கௌதம புத்தரால் முதலில் கற்பிக்கப்பட்ட அடிப்படை தியானங்கள் உள்ளன, அவை அமைதி மற்றும் உணர்ச்சிகரமான நேர்மறை குணங்களை வளர்க்க உதவுகின்றன: சுவாசத்தின் கவனம் (the Mindfulness of Breathing) மற்றும் அன்பான கருணை (Metta Bhāvanā) தியானங்களாகும்.
ஆனாபானசதி தியானம்
காயனுபஸ்ஸனா என்ற பகுதியில் பகவான் புத்தர் முதன் முதலாக போதித்த தியானம் ஆனாபானசதி தியானமாகும். ஆனாபானசதி என்றால் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு எனும் இரண்டின் மீதும் கவனம் செலுத்துதலாகும். பிறந்த நாளிலிருந்தே நாம் சுவாசித்தாலும், அந்த மூச்சினை அடிப்படையாகக்கொண்டு மனதினை செம்மைப்படுத்தி தூய்மைப்படுத்தமுடியும் என்பதனை பகவான் புத்தர் 2500 வருடங்களுக்கு முன்னரே போதித்துள்ளார். கோடிக்கணக்கான மக்கள் இந்த தம்மத்தை பழகி பயன்பெற்று வந்துள்ளனர்.
பிறந்த நாளிலிருந்தே நாம் சுவாசித்தாலும், அந்த மூச்சினை அடிப்படையாகக்கொண்டு மனதினை செம்மைப்படுத்தி தூய்மைப்படுத்தமுடியும் என்பதனை பகவான் புத்தர் 2500 வருடங்களுக்கு முன்னரே போதித்துள்ளார். கோடிக்கணக்கான மக்கள் இந்த தம்மத்தை பழகி பயன்பெற்று வந்துள்ளனர்.
பகவான் புத்தர் - உஜுங் காயங் பணிதாய, அதாவது இருகால்களையும் மடித்துக்கொண்டு கீழே அமர்ந்த பிறகு முதுகு நேராக (பத்மாசனம்) இருக்க வேண்டும் என்றும் மனத்தை அலையவிடாது, விழிப்பாய் இருக்கவும், உடலை நேராக வைத்திருப்பது மிக அவசியம் ஆனால் விறைப்பாக வைத்திருக்க வேண்டியதில்லை என்றும், கையை வசதியாக மடியில் வைத்து கண்களை மூடிக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
சிறந்த வழி
நமது அன்றாட வாழ்க்கையில் புறச் சூழ்நிலைகளால் ஏற்படும் தொந்தரவுகளினால் மன அமைதியை இழந்து, அவற்றை புறச் சூழ்நிலைகளிலே தேடிக்கொண்டிருக்கிறோம். இன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கும் மனதின் மீது தங்கள் கவனத்தை திருப்புவதே தியானத்திற்கு சிறந்த வழியாகும்.
Lord Buddha has blessed all human beings with love, compassion, and the noble of living in a simple and effective way of meditation.
எல்லா ஜீவன்களும் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் விளங்கட்டும். சாது சாது சாது.
Meditation
Meditation Center:
Vipassana Meditation Centre, ‘Dhamma Setu’, 533 Pazhanthandalam Road, Thirumudivakkam, (Via Thiruneermalai), Chennai – 600 044. INDIA.